சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
  'டவுட்' தனபாலு

பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி: 'கொரோனா' வைரஸ் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை புரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, இலவசமாக ஆயுள் காப்பீட்டும், சிறப்பு ஊதியமும் வழங்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: 'டவுட்'டே இல்லாமல், அருமையான யோசனை. உண்மையில், சிறப்பாக செயல்படுகின்றனர், சுகாதாரத் துறையினர். அந்த துறையின் செயலர் பியூலா தலைமையில், தமிழகம் முழுக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு என்ன செய்தாலும் தகும் என்ற பேச்சு, நாடு முழுவதும் அடிபடுகிறது. அதையே, டாக்டரான நீங்களும் வலியுறுத்துகிறீர்கள்!

கால்நடைத் துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன்: கோழிக்கறி, முட்டை சாப்பிடுவதால், 'கொரோனா' பரவாது. இதை, சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். தேவையற்ற வதந்தியால், தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியாளர்கள் என்னை சந்தித்து, விபரம் தெரிவித்தனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, ஆய்வு செய்து வருகிறோம்.

'டவுட்' தனபாலு: இறைச்சி உணவு விஷயத்தில், மக்களுக்கு அடிக்கடி இது போன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவர்களின், 'டவுட்'டுகளை தீர்க்கும் வகையில், இறைச்சி உணவு குறித்த வெளிப்படை தன்மை அவசியம். எனினும், பணத்தாசை பிடித்த சிலர் செய்யும் செயல்களால் தான், இறைச்சி உணவு மீதே மக்களுக்கு சந்தேகம் எழுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

பத்திரிகை செய்தி: பாஸ்புக் பிரின்ட், வங்கி கணக்கு இருப்பு அறிவது போன்ற, அவசரமில்லா வேலைகளுக்காக, வங்கிகளுக்கு வருவதை தவிர்க்கவும். வந்தாலும், உறவினர்கள், நண்பர்களையோ அழைத்து வருவதை தவிர்க்கவும். தேவையற்ற இடங்களில் கைகள் வைப்பதை தவிர்க்கவும். வங்கியில் வேலை முடிந்ததும் கிளம்பி விடுங்கள். உடல் நலமில்லாமல் இருந்தால், வங்கிக்கு வருவதை தவிர்க்கவும்.

'டவுட்' தனபாலு: கொரோனா வைரஸ் பீதி காரணமாக, வங்கிக்கே வர வேண்டாம்; ஆன்லைனில் அனைத்தையும் செய்து கொள்ளுங்கள் என, வாடிக்கையாளர்களுக்கு, வங்கி நிர்வாகங்கள் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், வங்கித் துறையில் ஆன்லைன் ஆதிக்கத்தை எதிர்த்து, வங்கி ஊழியர் சங்கத்தினர் அடிக்கடி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால், அவர்களின் இரட்டை நிலைப்பாடு, 'டவுட்' இல்லாமல் மக்களுக்கு தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-மார்-202006:03:03 IST Report Abuse
D.Ambujavalli அசைவம் உண்போர், தற்போதைய கொரோனா பீதியினாலேயே, நமக்கு எதற்கு ரிஸ்க் என்று கூட ‘கட்டாய சைவம்’ நிலைக்கு மாறியிருக்கலாம் ஒரு காலத்தில் ‘பருப்புத் தின்னி’ ‘தயிர் சாதம்’என்று பட்டப்பெயர் வைத்தும், ஒரு நடிகருக்கு ‘சாம்பார்’ என்றே பெயரிட்டு அழைத்தவர்கள் இன்று மிளகு ரசம், இஞ்சித் துவையல் என்று மாறியுள்ளனர் என்றால் உயிர் பயம் நாக்கு ருசியைக் கூட மாற்ற வல்லது என்று தெரிகிறது
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
20-மார்-202005:52:18 IST Report Abuse
a natanasabapathy உறுப்பிடாத ஸ்டேட் வங்கிக்கு செல்வது எப்போதுமே தெண்டம் தான் வேலை செய்ய வலிக்கிறது அவர்களுக்கு மாதத்துக்கு இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்வது மட்டுமே அவர்கள் தொழில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X