பொது செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடு பஸ் நிலையம் மார்க்கெட் தொடர்ந்து இயங்கும்

Added : மார் 19, 2020
Share
Advertisement

சென்னை: 'கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், மார்க்கெட் ஆகியவற்றை மூட, எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை; அவை, வழக்கம்போல் இயங்கும்' என, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தடுப்பு நடவடிக்கை

அவரது அறிக்கை:சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டுப்பாட்டில், கோயம்பேடில் அமைந்துள்ள, பஸ் நிலையம், கோயம்பேடு காய்கனி அங்காடி, பொதுமக்கள் தினமும், அதிகம் பயன்படுத்தும் இடங்களாக உள்ளன. பொதுமக்களின் அன்றாட தேவைக்கு, போக்குவரத்து, காய்கனி அங்காடி, மிகவும் இன்றியமையாதவை. எனவே, இவ்விரு இடங்களில், பொதுமக்கள் அதிகம் கூடினாலும், தொடர்ந்து நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை எடுக்கும்படி, துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை பஸ் நிலையம் மற்றும் கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகங்களில், கடைகள் வழக்கம் போல் இயங்கும்.

அங்கு பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், பொதுமக்களுக்கு பரிசோதனையும், சுற்று வட்டாரப் பகுதியில், கிருமி நாசினியும் தெளிக்கப்படுகின்றன.வதந்திஆனால், சில சமூக வலைதளங்களில், கோயம்பேடு காய்கனி அங்காடி மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக, வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X