பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா சாலையில் அதிநவீன, 'கேமரா'

Added : மார் 19, 2020
Share
Advertisement

அண்ணா சாலை: அண்ணா சாலை காவல் நிலையம் சார்பில், ஆறு இடங்களில், அதிநவீன, 'கேமரா' பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை போலீஸ் கமிஷனராக, ஏ.கே.விஸ்வநாதன் பதவி ஏற்றபின், சட்டம் -- ஒழுங்கு மட்டுமல்லாமல், போக்குவரத்து பிரிவிலும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை முழுவதும் அமைக்கப்பட்டு வரும், 'மூன்றாவது கண்' என அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராவை, அவரது முயற்சிக்கு உதாரணமாக கூறலாம். இந்நிலையில், அண்ணா சாலை சட்டம் - ஒழுங்கு காவல் நிலையம் சார்பில், ஆறு இடங்களில் அதிநவீன கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.இதுகுறித்து ஆய்வாளர் சந்திரமோகன் கூறியதாவது:அண்ணா சாலையில், ஸ்பென்சர் சிக்னல், உட்ஸ் சாலை சிக்னல் உட்பட ஆறு இடங்களில், தலா, 1 லட்சம் ரூபாய் செலவில், அதிநவீன கேமரா பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்ணா சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்டை, இந்த கேமரா துல்லியமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும். மேலும் ஒரு மாதத்திற்குள், ஒரு வாகனம் எத்தனை முறை சென்று வந்துள்ளது என்பதையும் அறிந்து கொள்ளலாம். சென்னையில் முதன் முறையாக, இதுபோன்ற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X