காலி பணியிடங்கள் நிரப்புவதில் சிக்கல்

Added : மார் 19, 2020
Share
Advertisement

'சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், 59 பணியிடங்கள் நிரப்பப்படும்' என்ற, அரசின் அறிவிப்பு, ஓராண்டாகியும் செயல்படுத்தப்படாமல் உள்ளது

.சி.எம்.டி.ஏ.,வில், கட்டுமான திட்ட அனுமதி பணிகளை விரைவுபடுத்த, கூடுதல் பணியாளர்கள் தேவை எழுந்தது. இதையறிந்த அரசு, 32 உதவி திட்ட அமைப்பாளர்கள், 27 திட்ட உதவியாளர்கள் என, மொத்தம், 59 பணியிடங்களை நிரப்ப, அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, 2019 -- 20, மானிய கோரிக்கை விவாதத்தில் வெளியிடப்பட்டது.

அரசு ஒப்புதல் அளித்து, ஓராண்டாகியும், இந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:சி.எம்.டி.ஏ.,வில், நிர்வாக பணிகளை மேற்கொள்ள, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் இருந்து, நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு வரும் அதிகாரி தான், அரசு விதிகளின்படி, பணியாளர் நியமனங்களுக்கு நடவடிக்கைகள் எடுப்பர்.உயர் பதவியில் உள்ளோரை, அடுத்த நிலை அதிகாரிகள் கட்டுப்படுத்தும் நிலை உள்ளதால், அரசு ஒப்புதல் அளித்தும், காலி பணியிடங்களை நிரப்ப முடியாத சூழல் நிலவுகிறது.இதனால், கட்டுமான திட்ட அனுமதி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாக பணிகளுக்கு, உரிய உயர் அதிகாரிகளை அரசு நியமித்தால் மட்டுமே, இக்குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X