சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மார் 19, 2020
Share
Advertisement
  பேச்சு, பேட்டி, அறிக்கை

தி.மு.க., - எம்.பி., ராஜா பேச்சு: எம்.எஸ்.சி., கணிதம் படித்த பெண், துப்புரவு பணியாளராக தமிழகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டில் நிலவும், வேலையில்லா திண்டாட்டத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இது, கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேச்சு: வங்கிகளில் கடன் பெற்றவர்கள் பட்டியலை வெளியிட, மத்திய அரசு மறுக்கிறது. கடந்த, ஆறு ஆண்டுகளில், 7.78 லட்சம் கோடி ரூபாயை, வாராக்கடன் என, மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது வெளிப்படையாகிறது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: வருமான வரி தொடர்பான புதிய மசோதாவுக்கு, ஹிந்தியில் பெயர் சூட்டியுள்ளது மத்திய அரசு. வருமான வரி செலுத்துவோர், பல மாநிலங்களில் உள்ளதால், மாநில மொழிகளிலும் அந்த மசோதாவுக்கு பெயர் சூட்ட வேண்டும். சற்று அசந்தால் போதும், மாநில மொழிகளை, மத்திய அரசு காணாமல் செய்து விடும்.


தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு: எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தடுக்கும் கண்காணிப்பு குழுவின் கூட்டத்தை, தமிழகத்தை ஆளும், அ.தி.மு.க., அரசு ஒரு முறை கூட கூட்டவில்லை. அதுபோல, பல மாநில முதல்வர்களும் அசட்டையாக இருந்துள்ளனர். மத்திய அரசும் அது பற்றி அக்கறையின்றி உள்ளது.


ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: மூன்று சமஸ்கிருத, மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கும் சட்ட மசோதா முன் வரைவை, மத்திய அரசு தாக்கல்செய்துள்ளது. தமிழுக்கு ஓரவஞ்சனை செய்யப்படும் நிலையில், சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால், பிற மொழிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.


சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை: கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக, போன்களின் அழைப்பு குரலில், இருமல் சத்தம் இருந்ததை கண்டித்து, அதை உடனடியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதன்படி, இருமல் சத்தம் இல்லாமல் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X