சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஆர்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்த பெண் தாசில்தார்!

Added : மார் 19, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
   ஆர்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்த பெண் தாசில்தார்!

''வாரியத் தலைவர் பதவிகளை, வாரி வழங்கப் போறாங்க பா...'' என, ஏலக்காய் டீயை பருகியபடியே, விவாதத்தை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''இன்னும் ஒரு வருஷத்துல, தேர்தலே வரப் போவுதுல்லா... இப்ப போய், ஏன் வாரிய தலைவர் பதவிகளை நிரப்பணும்...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''ஆளுங்கட்சியில, ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைந்த, முக்கிய நிர்வாகிகளுக்கு தான் வாரிய தலைவர் பதவிகள் குடுக்க போறாங்க...''முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு, திட்டக்குழு துணைத் தலைவர் பதவி கொடுத்த மாதிரி, வாரியத் தலைவர் பதவிகள், கோவில் அறங்காவலர் பதவிகளை, ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு வாரி வழங்க போறாங்க... ''இப்படி பதவிக்கு வர்றவங்க, சட்டசபை தேர்தல்ல, கட்சிக்காக கடுமையா உழைப்பாங்கன்னும் கணக்கு போடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''ஊழியர்களுக்கு தியானம், விளையாட்டு போட்டிகளை நடத்துறாங்க...'' என, புதிய விஷயத்தை பேச ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும், கூடுதல் கலெக்டருமா இருக்கிறவங்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பிரியங்கா... இவங்க, மதுரைக்கு வந்து நாலு மாசமாகுதுங்க...''எப்ப வேணும்னாலும், இடிஞ்சு விழும்கிற நிலையில இருந்த அலுவலகத்தை, பக்கத்துல இருந்த அரசுக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு மாத்தினாங்க...''அதுவும் இல்லாம, வார விடுமுறை நாட்கள்ல, ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடத்தி, பரிசுகளையும் வழங்குறாங்க... அதோட, வாரத்துல மூணு நாள், பயிற்சியாளர்களை வச்சு, ஊழியர்களுக்கு தியானம், யோகா கற்றுக் குடுத்துட்டு இருக்காங்க... இதனால, ஊழியர்கள் எல்லாம் உற்சாகமா, தங்களது வேலைகளை செய்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''மறைமுகமா மிரட்டல் விடுத்திருக்காங்கல்லா...'' என, கடைசி தகவலுக்கு தாவினார் அண்ணாச்சி.''யாருக்கு, யாருங்க மிரட்டல் விடுத்தது...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.''திருச்சி மாவட்டத்துல ஒரு பெண் தாசில்தார் இருக்காங்க... இவங்க பெயருக்கு முன்னாடி, 'கல்லாப்பெட்டி'ன்னு பட்ட பெயர் போட்டு தான், ஊழியர்கள் பேசிக்குவாங்க... அந்த அளவுக்கு கறாரான வசூல் பார்ட்டியா இருக்காங்க வே...''சமீபத்துல, மாற்றுத்திறனாளி ஆர்.ஐ., ஒருத்தர், அஞ்சு மணல் லாரிகளை மடக்கி பிடிச்சிருக்காரு... உடனே, அவரது போன்ல வந்த பெண் அதிகாரி, லாரிகளை விடும்படி சொல்லிட்டாங்க வே...''மறுநாள், ஆர்.ஐ.,யை தன் ஆபீசுக்கு வரவழைச்சு, 'மணல் லாரிகளை பிடிக்கறப்ப, உங்க உயிருக்கு ஏதாவது ஆகிட்டா, யார் பதில் சொல்றது'ன்னு மிரட்டல் தொனியில பேசியிருக்காங்க வே...''அதுவும் இல்லாம, 'உங்களுக்கு வருமானம் வேணும்னா, வேற ஏற்பாடு பண்றேன்... மணல் லாரிகளை கண்டுக்க வேண்டாம்'னு சொல்லி அனுப்பியிருக்காங்க வே...'' என்றார், அண்ணாச்சி.தெருவில் சென்ற சிறுமியை நிறுத்திய குப்பண்ணா, ''அகிலா, உன் தோப்பனார் ஆத்துல இருக்காரோல்லியோ...'' என, விசாரிக்க, சிறுமி தலையை அசைத்தபடி ஓடினாள். பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thomas - Al Khor,கத்தார்
20-மார்-202009:14:41 IST Report Abuse
Thomas பணமதிப்பிழப்பு செய்யும் போது ஊழல் லஞ்சம் ஒழிந்துவிடும் என்ற புண்ணியவான்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
20-மார்-202008:42:48 IST Report Abuse
Ramachandran Rajagopal அரசு பனி என்பது நேர்மையானவர்களுக்கானது அல்ல.அரசு ஊழியர் என்ற பெயரால் குற்றங்கள் பல புரிபவர்களுக்கே ஆகும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-மார்-202006:13:03 IST Report Abuse
D.Ambujavalli ‘எனக்குக் கிடைப்பதில் கை வைக்காதே உன் லெவலுக்கு சேரவேண்டியதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். என் ஏரியாவில் மூக்கை நுழைத்தால் நடப்பதே வேறு’ என்ற எச்சரிக்கையின் மறு பக்கம் தான் ‘உங்களுக்கு ‘ஏதானும் ஆனால்’ என்பது. அதாவது மீறினால் அந்த ‘ஏதாவதுக்கும் ‘ ஏற்பாடு செய்யப்படும் என்பதுதான் இதன் பொழிப்புரை, கருத்துரை எல்லாம்.
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
20-மார்-202009:49:10 IST Report Abuse
மூல பத்திரம் ஆம் அரசு உடனே அந்த அகிலா என்கிற அலுவலரை துறை ரீதியாக விசாரிக்கணும்...
Rate this:
Gopinathan S - chennai,இந்தியா
20-மார்-202014:27:06 IST Report Abuse
Gopinathan Sஊழல் செய்வதில் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை இன்றைய பெண்கள்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X