சாலையை, 'பார்' ஆக மாற்றி, 'குடி'மகன்கள் அட்டகாசம்

Added : மார் 19, 2020
Share
Advertisement

மயிலாப்பூர்: 'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'பார்'கள் மூடப்பட்டுள்ள நிலையில், 'குடி'மகன்கள்சாலையை, பார் ஆக மாற்றி, குழுவாக மது அருந்துவதால் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மயிலாப்பூர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள, பல்லக்கு மாநகரில், தொடர்ச்சியாக அடுத்தடுத்த கட்டடங்களில், மூன்று, 'டாஸ்மாக்' கடைகள், 'பார்' வசதியுடன் இயங்கி வருகின்றன.இந்த கடைகளால், அப்பகுதி மக்கள் மற்றும் ரயில் பயணியர், சாலையில் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கொரோனா நடவடிக்கைக்காக, தமிழகம் அரசு அனைத்து, 'பார்'களையும் மூட உத்தரவிட்டது.

இதையடுத்து, குடிமகன்கள் டாஸ்மாக்கில் மது வாங்கி, பட்டப்பகலிலேயே சாலை, தெருக்களை ஆக்கிரமித்து, அங்கேயே குழுவாக மது அருந்தி, அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.நட்சத்திர விடுதி போன்ற இடங்களில் இருந்த பெரிய பார்கள் அனைத்தும் மூடப்பட்டதால், இரண்டு நாட்களாக இப்பகுதியில், குடிமகன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்கு, காவல் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X