பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களுக்கு 'கொரோனா' விழிப்புணர்வு: அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்

Added : மார் 19, 2020
Share
Advertisement

கோவை:வீடுகள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும், மார்ச் 31ம் தேதி வரை அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 15 நாட்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கொண்டை கடலை, முட்டை போன்ற உணவுகளை, குழந்தைகளின் வீட்டுக்கே நேரில் சென்று, அங்கன்வாடி பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.
கோவையில் உணவு வழங்கும் பணிகள், 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், வீடுகளில் ஆய்வு செய்யும் அங்கன்வாடி பணியாளர்கள், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாட்சி கூறியதாவது:ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கோவையில், ஆயிரத்து 697 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.மழலையர் வகுப்புகள் உட்பட இதில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
இவர்களுக்கு, மதிய உணவுடன், வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை, செவ்வாய்தோறும் கொண்டைக்கடலை, பாசிப்பயிறு ஆகியவை வழங்கப்படுகிறது.அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், 15 நாட்களுக்கு தேவையான உணவு, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. கோவையில் உணவுப்பொருட்கள் வினியோகிக்கும் பணிகள், 80 சதவீதம் முடிந்துள்ளது.கற்பித்தல் தவிர, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி, உயரம், எடை கணக்கிடுதல், வளரிளம் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்களுக்கான ஆலோசனைகள், சத்துணவு தொடர்ந்து அங்கன்வாடிகளில் வழங்கப்படும்.
இதனுடன், வீடுகளில் ஆய்வுக்கு செல்லும் அங்கன்வாடி பணியாளர்கள், கொரோனா வைரஸ் பரவும் முறை, வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள், கட்டுப்படுத்தும் முறைகள், தனிமனித சுகாதாரத்தின் அவசியம் ஆகியவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.ஒரு குழந்தைக்கு, தினமும் 80 கிராம் வீதம் ஒரு கிலோ 200 கிராம் அரிசி, கொண்டைக்கலை மற்றும் பருப்பு தலா 10 கிராம், ஆறு முட்டைகள் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம், குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது.மீனாட்சிதிட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X