பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி துப்புரவு பணியாளருக்கு 6 மாதமாக சம்பளம் இல்லை

Added : மார் 19, 2020
Share
Advertisement

கமுதி : கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்காததால், ஊராட்சிகளில் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் துப்புரவு பணியில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கிராமப் புறங்களில் வீடு, வீடாக சென்று மக்கும், மக்கா குப்பையை சேகரித்து, பின்னர் தரம் பிரித்து அழித்தும், மறு சுழற்சி பணியிலும் ஈடுபடுகின்றனர்.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதால் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் வேளையில், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 6 மாதமாக சம்பளம் வழங்காததால், கிராமப் புறங்களில் துாய்மை பணிகளை மேற்கொள்ள போவதில்லை என, புறக்கணித்து வருகின்றனர்.

இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் குப்பை தொட்டிகள் நிரம்பி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே 6 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X