பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஐ.டி., நிறுவனத்திற்கு, 'சீல்'; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Added : மார் 20, 2020
Share
Advertisement

சென்னை; சென்னை, போரூரில் இயங்கி வந்த, ஐ.டி., நிறுவனத்திற்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், திரையரங்குகள், வணிக வளாகம் உள்ளிட்ட, மக்கள் அதிகம் கூடும் மையங்களை, மார்ச், 31ம் தேதி வரை மூட, அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில், ஓ.எம்.ஆர்., சாலை, சோழிங்கநல்லுார், சிறுசேரி, போரூர் டி.எல்.எப்., மகேந்திரா டெக்பார்க் உள்ளிட்ட வளாகங்களில், ஏராளமான, ஐ.டி., நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். பல, ஐ.டி., நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை, வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பெரும்பாலான, ஐ.டி., நிறுவனங்களில், ஊழியர்கள் அலுவலகம் சென்று,பணி புரிகின்றனர்.இந்நிலையில், முகலிவாக்கம், போரூர் -- மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, ஐ.டி., நிறுவனத்தில், வளசரவாக்கம் மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள், நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அந்நிறுவனத்தில், 1,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்ததால், அவர்களை வீட்டில் இருந்து பணிபுரியும்படி, ஐ.டி., நிறுவன நிர்வாகத்திற்கு, சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.ஆனால், ஐ.டி., நிறுவன நிர்வாகத்தினர், அதிகாரிகளுடன் வாதாடியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, மாநகர கூடுதல் நல அலுவலர், மகாலட்சுமி மற்றும் மண்டல நல அலுவலர், ராஜா ஆகியோர் தலைமையில், ஐ.டி., நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பின், குறைந்த ஊழியர்களுடன் செயல்படுவதாக, ஐ.டி., நிறுவனம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்து, மாலையில் சீல் அகற்றப்பட்டது.இந்த அதிரடி நடவடிக்கை குறித்து, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை, வீட்டில் இருந்தபடி பணி செய்யவும், போதிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.சூழ்நிலையை புரிந்து, ஐ.டி., நிறுவனங்களே முன்வந்து, ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணி செய்ய அறிவுறுத்த வேண்டும். அவசரம் கருதி, மண்டல அதிகாரிகள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவே, வேறு விதமான சூழ்நிலை ஏற்பட்டால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற பேச்சு வரும்.இது, மக்களின் உயிர் சம்பந்தமான விஷயம். சில நேரங்களில், இது போன்ற முடிவுகள் கடுமையாக தான் இருக்கும். மக்களின் நலனிற்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்பதால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X