சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு

Added : மார் 20, 2020
Share
Advertisement

கமுதி : கூட்டுறவு வங்கி லாக்கரை ஜாதகம் பார்ப்பவர் வீட்டில் அமைத்திருப்பதால், அடகு வைக்கப்பட்ட நகைகளை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கமுதி அருகே கே.பாப்பாங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், பத்தாண்டுகளுக்கும் மேலாக தனியார் கட்டடத்தில் பாது காப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கே.பாப்பாங்குளம், செம்மனேந்தல், சீமனேந்தல் உட்பட சுற்றுவட்டார கிராம விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.இந்நிலையில், குறைந்த வட்டியில் நகைக் கடன், பயிர் கடன் உட்பட பல்வேறு கடன்களை பெற்ற விவசாயிகள் முக்கிய ஆவணங்களை கொடுத்தும், நகைகளை அடகு வைத்தும் கடன்களை பெறுகின்றனர்.

விவசாயிகள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஆவணங்கள், நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கி லாக்கர் தற்காலிகமாக செயல்படும் ஓட்டு வீட்டில் உள்ள, ஜாதகம் பார்க்கும் நபர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.தினமும் ஜாதகம் பார்ப்பதற்காக நுாற்றுக்கும் மேற்பட்டோர் வரும் இடத்தில் வங்கி லாக்கர் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வங்கி லாக்கரை எலி அல்லது பூனைகள் தொட்டு விட்டால் அலாரம் அடிக்கடி அடிப்பதால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தொல்லையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கே.வேப்பங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்த கட்டட வசதிகள் ஏற்படுத்தி, தற்காலிகமாக இ சேவை மையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X