பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை நண்பனுக்கு, 'ஆயுள்'

Added : மார் 20, 2020
Share
Advertisement

பூந்தமல்லி: ஆவடியில், சுத்தியால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆவடி, ஜே.பி., எஸ்டேட், இரண்டாவது மெயின் ரோட்டை சேர்ந்தவர், எழில் முருகன், 32; பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர், தாமோதரன், 34; இருவரும் நண்பர்கள்.கடந்த, 2015ல், எழில்முருகன் அழைத்து வந்த, ஒரு பெண்ணிடம் தாமோதரன், பாலியல் உறவு கொண்டதாகவும், அதன்பிறகு, அவரது உடலில் பிரச்னை ஏற்பட்டு, மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், பால்வினை நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த விஷயத்தை, நண்பர்களிடம் சொல்லி விடுவேன் என, எழில்முருகன் கூறியதாகவும் தெரிகிறது. மேலும், தான் செல்லும் போதெல்லாம், நண்பர்களிடம் எழில்முருகன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த தாமோதரன், தன்னை குறித்து தான் பேசுகிறார் என நினைத்து, ஆத்திரத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில், தாமோதரன், மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து, எழில்முருகனின் தலையில் அடித்து கொலை செய்தார். விசாரித்த ஆவடி போலீசார், தாமோதரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு, பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் - 2ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி சாந்தி, நேற்று தீர்ப்பு வழங்கினார்.தாமோதரன் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.அபராதம் கட்ட தவறினால், மேலும், ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இவ்வழக்கில், அரசு தரப்பில், வழக்கறிஞர் கருணாகரன் ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X