பொது செய்தி

தமிழ்நாடு

'பிரிட்டானியா' சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி

Added : மார் 20, 2020
Share
Advertisement

சென்னை: பிரிட்டானியா நிறுவனம், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து, 10 ஆயிரம் இல்லத்தரசிகளுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க உள்ளது

.நாட்டில், பிஸ்கட் உற்பத்தி மற்றும் விற்பனையில், 'பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து, 'பிரிட்டானியா மேரி கோல்ட் மை ஸ்டார்ட்அப்' என்ற பெயரில், நடப்பாண்டில், நாடு முழுவதும், 10 ஆயிரம் இல்லத்தரசிகளுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க உள்ளது.அந்த பயிற்சி, ஏப்ரல், மே மாதங்களில், திறன் மேம்பாட்டு கழக இணையதளம் வாயிலாக நடத்தப்படும். அதில், தகவல் தொடர்பு திறன், தகவல் மற்றும் தொழில்நுட்பம், நிதி உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மேலும், பயிற்சியில் பங்கேற்போருக்கு, நிதி உதவிகள் செய்வதுடன், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீசின் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை அதிகாரி வினய் சுப்ரமணியம் கூறியதாவது:இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து, தொழில்முனைவோராக மாற்றுவதே, 'பிரிட்டானியா மேரிகோல்ட் மை ஸ்டார்ட் அப்'பின் நோக்கம்; பெண்கள், சுயசார்பு நிலையை அடையவும் வழிவகை செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X