பொது செய்தி

தமிழ்நாடு

காரங்காட்டில் படகு போக்குவரத்து நிறுத்தம்

Added : மார் 20, 2020
Share
Advertisement

திருவாடானை : கொரோனா எதிரொலியாக காரங்காட்டில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தொண்டி அருகே காரங்காடு கடலில் அழகிய சதுப்பு நிலக் காடுகளில் பறவைகள்வசிப்பதால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் ஏராளமானோர்படகுகளில் கடலுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். சுற்றுலாப் பயணிகள் செல்லும் வகையில் வனத்துறை சார்பில் படகுகள் இயக்கப்படுகிறது.கொரோனா நோய் தாக்குதல் காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கொரோனாவிற்காக படகு போக்குவரத்துதற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் துவங்கிய பின் படகு போக்குவரத்து துவங்கும், என்றனர்.சில மாதங்களுக்கு முன்பு படகு கவிழ்ந்து ஐந்து வயது சிறுவன் இறந்தான். அதன்பிறகு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு சில நாட்களுக்கு முன்பு தான் துவங்கியது.தற்போது கொரோனாவால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X