சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'இ - -சேவை' மையம் முற்றுகை

Added : மார் 20, 2020
Share
Advertisement

சோழிங்கநல்லுார்: ஆதார் பதிவுக்கு பணம் வாங்குவதாக, சோழிங்கநல்லுார், 'இ- - சேவை' மையத்தை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகத்தையொட்டி, இ- - சேவை மையம் உள்ளது. இங்கு, புதிய ஆதார் அட்டை, பெயர், முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடக்கின்றன.சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, நாவலுார் பகுதி மக்கள், ஆதார் சேவைக்காக இந்த மையத்தை நாடுகின்றனர். தினமும், 30 பேருக்கு மட்டுமே, பதிவு செய்யப்படுகிறது.அதுவும், 'டோக்கன்' முறையில் பணி நடக்கிறது. இதில், முறைகேடு நடப்பதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நேற்று, 50க்கும் மேற்பட்டோர் மையத்தை நாடினர்.சிலருக்கு, டோக்கன் கொடுத்த ஊழியர்கள், மீதமுள்ள நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், இ- - சேவை மையத்தை முற்றுகையிட்டனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:பேருந்து வசதி உள்ளதால், இந்த மையத்தை நாடுகிறோம். ஆட்கள் இல்லாமலே, 30 பேருக்கு டோக்கன் வழங்கியதாக ஊழியர்கள் கூறினர். விசாரித்ததில், பணம் கொடுப்பவர்களை, குறிப்பிட்ட நேரத்தில் மொபைல் போன் வழியாக வரவழைத்து, பதிவு செய்கின்றனர். மூன்று நாட்களாக அலைக்கழிக்கப்படுகிறோம். உயர் அதிகாரிகள் தலையிட்டு, முறைகேட்டை தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இ - -சேவை மைய ஊழியர்களிடம் கேட்டபோது, 'பணம் வாங்கவில்லை. முறையாக, டோக்கன் வழங்கி பதிவு செய்கிறோம். 'கூடுதல் இயந்திரம் வழங்கினால், அதிக நபர்களுக்கு பதிவு செய்ய முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X