பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மாநகர பஸ்கள் குறைப்பு

Added : மார் 20, 2020
Share
Advertisement
 சென்னை மாநகர பஸ்கள் குறைப்பு

சென்னை: 'கொரோனா' பாதிப்பு எதிரொலியாக, சென்னை மாநகர பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில், கொரோனா வைரஸ் பாதித்துள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,

பல தனியார் நிறுவனங்கள், தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும்படி அறிவுறுத்தி உள்ளன.அதேநேரம், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு இடங்கள், வணிக வளாகங்களை மூடவும், நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் அரசு உத்தரவிட்டதையடுத்து, மக்களின் பயணம் படிப்படியாக குறைந்துள்ளது.இதனால், பல்வேறு வழித்தடங்களில் அடிக்கடி இயக்கப்பட்டு வந்த பஸ்களின் எண்ணிக்கை, படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால், நீண்ட நேரத்துக்கு ஒரு பஸ் என இயக்கப்படுகிறது.

இது குறித்து, மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மக்களிடம், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால், தேவையில்லாத பயணங்களை தவிர்த்துள்ளனர். எனவே, ஒவ்வொரு பணிமனையிலும், 20 பஸ்களுக்கும் மேல் குறைக்கப்பட்டு, மொத்த பஸ்களில், 600க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இயக்கப்படும் பஸ்களை முழுமையாக கிருமி நாசினி தெளித்து அனுப்புகிறோம். அதேபோல், ஓட்டுனர், நடத்தனர்களுக்கு, முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X