பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநிலத்திற்கு பஸ்கள் இயக்குவது குறைப்பு

Added : மார் 20, 2020
Share
Advertisement

திண்டுக்கல்: 'கொரோனா' எதிரொலியால், திண்டுக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயக்குவது குறைக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் 'கொரோனா' தடுக்க, பஸ்கள், ரயில்கள், பொது இடங்களில் சுகாதாரத்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. நேற்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை, கலெக்டர் ஆய்வு செய்தார்.அப்போது அவர் தெரிவித்தது: மாவட்ட எல்லையோரத்தில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து தினமும் 800 பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்சில் பயணிப்பதன் மூலம் கொரோன பரவலை தடுக்க, வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, தெரிவித்தார். போக்குவரத்து மண்டல பொது மேலாளர் கணேசன், நகர்நல அலுவலர் அனிதா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X