பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கண்காணிப்பில் இருந்த 4 பேர் விடுவிப்பு

Added : மார் 20, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் டாக்டர் உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லாததால் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

வெளிநாடுகளுக்கு சென்று வந்து கொடைக்கானலில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த 55 வயதுடைய டாக்டர் ஒருவர் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் இருந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறிய அவரது ரத்தம், சளி பரிசோதனைக்கு தேனிக்கு அனுப்பினர். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதேப்போல், பொது வார்டில் இருந்த பஞ்சாப்பில் இருந்து சின்னாளப்பட்டி வந்த 18 வயது வாலிபர், கேரளா பாலக்காட்டில் இருந்து வந்த 35 வயதுடையவர் மற்றும் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட வத்தலக்குண்டு நபர் ஆகியோருக்கு கொரோனா அறிகுறி இல்லாததால், கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என, இணை இயக்குனர் பூங்கோதை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X