பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை இந்தியன் வங்கிக்கு பாராட்டு

Added : மார் 20, 2020
Share
Advertisement
 கொரோனா தடுப்பு நடவடிக்கை இந்தியன் வங்கிக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி:கை, கால்களை கழுவிவிட்டு வங்கிக்கு வாங்க எனும் கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி கிளையின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை வாடிக்கையாளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வங்கியின் வாசலில் இரண்டு பக்கெட் தண்ணீர் மற்றும் டெட்டால் திரவ சோப் வைத்துள்ளனர். இதனை பயன்படுத்தி வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை கை, கால்களை சுத்தப்படுத்திவிட்டு வரவேண்டும் என கிளையின் முதுநிலை மேலாளர் சுப்ரமணி அறிவுறுத்தி வருகிறார்.இதனால் 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட இந்தியன் வங்கி கிளையின் இந்த நடைமுறையால் கொரோனா அச்சமின்றி பணிபுரியலாம் என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த செயலை வாடிக்கையாளர்களும் பாராட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X