பொது செய்தி

தமிழ்நாடு

ஜோதிர்லிங்க தரிசன நடைபயண குழுவிற்கு பொரசக்குறிச்சி இந்து முன்னணி வரவேற்பு

Added : மார் 20, 2020
Share
Advertisement
 ஜோதிர்லிங்க தரிசன நடைபயண குழுவிற்கு பொரசக்குறிச்சி இந்து முன்னணி வரவேற்பு

கள்ளக்குறிச்சி:ஜோதிர்லிங்க தரிசனத்திற்காக நடைபயணம் மேற்கொண்டுள்ள வடமாநில பக்தர்களுக்கு பொரசக்குறிச்சி இந்து முன்னணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அவதுாத் நர்மதா நந்தபப்ஜி குருதேவ் தலைமையில் பக்தர்கள் இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்க தரிசனத்திற்கான பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.கடந்த 6 மாதங்களுக்கு முன் உத்ரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரியிலிருந்து துவங்கிய இந்த யாத்திரை குழுவினர் ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிர்லிங்க தரிசனத்திற்கு செல்கின்றனர்.ஜோதிர்லிங்க தரிசனத்திற்கிடையே வழியெங்கும் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிவலிங்கங்களை தரிசனம் செய்வதுடன், தங்கும் இடமெங்கும் வேப்ப மரக்கன்றுகளை நட்டு, அதனை அப்பகுதி மக்கள் மூலமாக பராமரித்திடும் பணிகளையும் இக்குழுவினர் செய்து வருகின்றனர்.வழியில் கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சி கிராமத்திற்கு வருகை தந்த இக்குழுவினருக்கு கிளைத் தலைவர் மணிகண்டன் தலைமையிலான இந்து முன்னணியினர் வரவேற்பு அளித்தனர். இந்த கிராமத்திலும் வேப்ப மரக்கன்றினை நட்டு வைத்த யாத்திரை குழுவினர் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, ராமேஸ்வரம் நோக்கி, நடைபயணத்தை தொடர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X