பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை பஸ் ஸ்டாண்ட்களில் தீவிரம்

Added : மார் 20, 2020
Share
Advertisement

கோவை:அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் போக்குவரத்து துறை சார்பில், பஸ் ஸ்டாண்ட்களில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, பஸ் ஸ்டாண்ட்கள், பஸ்களில் கிருமிநாசினி, 'பிளீச்சிங் பவுடர்' தெளிக்கப்பட்டு வருகிறது.வெளிமாநிலங்களுக்கு பயணிப்பதை தவிர்க்க, அரசு அறிவுறுத்தியுள்ளதால், பஸ் போக்குவரத்தை பயணிகள் தவிர்த்து வருகின்றனர். தவிர்க்க முடியாத காரணங்களால் பயணிப்போரிடம், அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் போக்குவரத்து துறை சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.காந்திபுரம் உள்ளூர், வெளியூர் பஸ் ஸ்டாண்ட்களில் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன், பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம், கோவை மண்டல பொது மேலாளர் மகேந்திரகுமார், மத்திய ஆர்.டி.ஓ., பாஸ்கரன், தெற்கு ஆர்.டி.ஓ., சரவணன் உள்ளிட்டோர், பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X