பொது செய்தி

தமிழ்நாடு

முககவசம் தயாரிக்கும் 'ஆர்டர்' குவிகிறது: மகளிர் சுய உதவிக்குழுவினர் மகிழ்ச்சி

Added : மார் 20, 2020
Share
Advertisement
 முககவசம் தயாரிக்கும் 'ஆர்டர்' குவிகிறது: மகளிர் சுய உதவிக்குழுவினர் மகிழ்ச்சி

கோவை:'கொரோனா' வைரஸ் பாதிப்பு அச்சத்தால், முககவசம் அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில், கோவை மாவட்டத்தில் உரிய பயிற்சிகளுடன், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில், கொரோனா பாதிப்புகுறித்து மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அனைவருக்கும் கட்டாயம் இல்லை என்றாலும்,ஒரு வித அச்சத்தில் முககவசம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.போக்குவரத்து, அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், காவல்துறையினர், தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் பணிக்கு வரவேண்டிய நிலை இருப்பதால், முககவசத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.கிருமிநாசினி மற்றும் முககவசம் போன்ற மருத்துவ பொருட்களை பதுக்குவதோ, அதிக விலைக்கு விற்பதோ கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும், இந்நிலை தொடர்கிறது.தட்டுப்பாடு மற்றும் அதிக விலைக்கு விற்பதை தவிர்க்கும் நோக்கில் கிருமிநாசினி தயாரிக்கவும், முககவசம் தயாரிக்கவும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், 13 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தையல் பணியில் ஈடுபடுபவர்கள். இவர்கள் குறைந்த விலையில் முககவசம் தயாரித்து வருகின்றனர்.கிருமிநாசினி தயாரிக்கும் நுட்பமும், முன்பே அதுசார்ந்த அனுபவமும் கொண்ட குழு பெண்களுக்கு, சுகாதாரத்துறை மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தற்போது, தமிழ்நாடு போக்குவரத்து துறை, 8,000 முககவசம் ஆர்டர் கொடுத்துள்ளனர்; காவல்துறையிலும் இது குறித்து பேசியுள்ளோம்.நாள் ஒன்றுக்கு, 15 ஆயிரம் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; தேவையை பொறுத்து உற்பத்தி அதிகரிக்கப்படும்,'' என்றார்.இந்நிலையில், கோவை மாவட்டத்தில், 10 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் கூட்டம் நடத்தவும், பிற செயல்பாடுகளை மேற்கொள்ளவும், மார்ச் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X