பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

Added : மார் 20, 2020
Share
Advertisement
 அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து அரசு பஸ்களிலும் கிருமி நாசினி அடிக்கும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டனர்.கொரோனா தொற்று நோய் பரவி வருவதை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் விதமாக உளுந்துார்ப்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன.நேற்று உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்திற்கு வந்த அனைத்து அரசு பஸ்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஸ் சக்கரங்கள், பயணிகள் படியேறும் வழிகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X