சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக மூவர் கைது

Added : மார் 20, 2020
Share
Advertisement

கோவை;பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்ற மூவரை, போலீசார் கைது செய்தனர்.கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன், 33. இவர் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவராக உள்ளார். இவரது நண்பர்கள் சின்னவேடம்பட்டியை சேர்ந்த தன்ராஜ், 43, மணிகண்டன், 38 ஆகிய மூவரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து இவர்களின் நடவடிக்கைகளை, போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் தங்களுக்குள் கூடி, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதியானது. மூவரையும் கைது செய்த போலீசார், தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X