கடைசி முயற்சியும் தோல்வி; நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
nirbhayacase,Delhi_HC,plea,hang,நிர்பயா,குற்றவாளிகள்,தூக்கு

புதுடில்லி: நிர்பயா குற்றவாளிகளின் வக்கீல், நள்ளிரவில் தாக்கல் செய்த மனுவை, டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அம்மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய, நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை உறுதியானது.

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கடைசி மனுவையும், நள்ளிரவில் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.


latest tamil news



இதுகுறித்து வழக்கு பதிவு செய்த, நிர்பயா குற்றவாளிகளின் வக்கீல், ஏ.பி.சிங் கூறுகையில், 'ஐகோர்ட் உத்தரவுக்கான நகல் வழங்கப்பட்டவுடன் நான் சுப்ரீம் கோர்ட் செல்ல உள்ளேன். இதுகுறித்து பதிவாளரிடம் பேசியிருக்கிறேன். அவரிடம் நான் செல்வேன்' இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், திஹார் சிறை வாசலில், நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், மார்ச் 20ம் தேதி, 'நிர்பயா நாள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி:


இதனை தொடர்ந்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பவன் குப்தா சார்பில் நள்ளிரவு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட், நள்ளிரவு 2.30 மணிக்கு தனது விசாரணையை துவங்கியது.


latest tamil news



விசாரணையில், குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி.சிங், 'அவர்கள் தூக்கிலிடப்படுவது உறுதி. ஆனால் அதை 2 அல்லது 3 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்' என வாதாடினார். நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் அவர்களை 5 -10 நிமிடங்கள் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் சிறை நடைமுறையில் அதற்கு அனுமதி இல்லை என நீதிபதி நிராகரித்தார்.

விசாரணையின் முடிவில், குற்றவாளிகளின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து திட்டமிட்டபடி, இன்று (மார்ச் 20) அதிகாலை 5.30 மணிக்கு, திட்டமிட்டபடி குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.


latest tamil news



தீர்ப்பு குறித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறுகையில், 'எனது மகளின் மரணத்துக்கு நீதி கிடைத்தது திருப்தி அளிக்கிறது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
20-மார்-202005:50:44 IST Report Abuse
வெகுளி நீதியை நிலைநாட்டிய நீதியரசருக்கு கோடானுகோடி நன்றிகள்.....
Rate this:
Share this comment
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
20-மார்-202005:37:07 IST Report Abuse
padma rajan அந்த வக்கீலையும் சேர்த்து தூக்கில் போடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
20-மார்-202003:59:06 IST Report Abuse
 nicolethomson இவர்களோடு சேர்த்து இவர்களை காப்பாற்ற போராடிய வக்கீலுக்கு தூக்கு கொடுங்கய்யா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X