சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவேறு விபத்தில் இருவர் பலி

Added : மார் 20, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே நடந்த இரு வேறு சாலை விபத்தில் இருவர் இறந்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 45: விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டில் நிலத்திற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பினார். பாப்பனப்பட்டு அழுக்கு பாலம் அருகே பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார், மொபட்டின் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.மற்றொரு விபத்துவிக்கிரவாண்டி அடுத்த வி.சாலையைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், 38; இவர், தனது பைக்கில் உறவினர் ராமலிங்கம், 69; என்பவருடன் கடந்த 17ம் தேதி காலை 11:00 மணிக்கு வீடூர் சென்று திரும்பினார். வீடூர் அணை அருகே வந்தபோது, குறுக்கே திடீரென மாடு வந்ததால் பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.இதில், படுகாயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமரன் நேற்று இறந்தார்.இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X