டோல் பிளாசா ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டோல் பிளாசா ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : மார் 20, 2020
Share
 டோல் பிளாசா ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி டோல் பிளாசா ஊழியர்களுக்கு பொது சுகாதார துறை சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனை சார்பில் டோல் பிளாசாவில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமை தாங்கினார். டோல் பிளாசா திட்ட மேலாளர் முத்து அண்ணாமலை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குணசேகரன், பி.ஆர்.ஓ., ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை மேலாளர் அசோக்குமார் வரவேற்றார்.ராதாபுரம் வட்டார அரசு மருத்துவமனை டாக்டர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன் ஆகியோர் டோல் பிளாசாவில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் குறித்தும், தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் விளக்கம் அளித்தனர்.டோல் பிளாசா துணை மேலாளர்கள் மனோஜ் யோகானந்த், கண்ணன், அமிர்தலிங்கம், சண்முகம், சுடலை முத்து, சுகாதார ஆய்வாளர் பாபு, போக்குவரத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மன்னழகன் மற்றும் போலீசார், டோல் பிளாசா பணியாளர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.திட்டஒருங்கிணைப்பு துணை மேலாளர் சொர்ணமணி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X