சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண்ணை ஏமாற்றி மிரட்டிய வாலிபர் கைது

Added : மார் 20, 2020
Share
Advertisement

விழுப்புரம்:விழுப்புரத்தில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றிய வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
காணை அடுத்த காங்கேயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. குடும்பத்துடன் நாமக்கல் பகுதியில் தங்கி, செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகிறார். இவரது 23 வயது மகள் பிளஸ் 2 வரை படித்து விட்டு வீட்டில் உள்ளார்.அகரம் சித்தாமூரைச் சேர்ந்த அய்யனார் மகன் பாலகுமார், 28; என்பவர், அதே செங்கல் சூளையில் பணி கேட்டு சென்ற போது காசி மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் பாலகுமாருடன் காசியின் மகள் நெருங்கிப் பழகினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதற்கு மறுத்துள்ளார். மேலும், அவரது உறவினர்கள் அய்யனார், நாவம்மாள் ஆகியோருடன் சேர்ந்து, திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் பாலகுமார், அய்யனார், நாவம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து பாலகுமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X