தமிழ்நாடு

வழங்கும் பஸ் கண்டக்டர்களால் எச்சில் டிக்கெட்! நோய் தொற்று ஏற்படும் அபாயம்

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 வழங்கும் பஸ் கண்டக்டர்களால் எச்சில் டிக்கெட்! நோய் தொற்று ஏற்படும் அபாயம்

கோவை:கொரோனா பீதியுடன் வேறு வழியின்றி, பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, புதிதாக ஒரு பீதி தொற்றிக் கொண்டுள்ளது. அது, சில பஸ் கண்டக்டர்கள் தரும் 'எச்சில் டிக்கெட்' பீதி! இது, நோய் தொற்று அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது.
உலகையே உலுக்கும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் கிருமிநாசினி மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வெளி மாநிலங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனால், பஸ், ரயில்களில் கூட்டம் குறைந்து வருவதால், பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றன. ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களாலும், அத்தியாவசிய தேவைக்காகவும், பஸ்களில் சிலர் பயணிக்கின்றனர்.எச்சில் டிக்கெட்!கொரோனா வைரஸ், இருமல், தும்மலின்போது வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நேரடியாக பரவுவதுடன், கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுதும், கைகள் மூலமும் பரவுகிறது.
இந்நிலையில், பழக்க தோஷத்தில் கண்டக்டர்கள் சிலர், நாக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்து தந்து வருகின்றனர்.இதனால், எதிர்பாராத விதமாக நோய் அறிகுறிகளுக்கு, பயணிகள் ஆளாகும் நிலை ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பீதியில் மக்கள் தவித்து வரும் நிலையில், கண்டக்டர்கள் நிலைமையை உணர்ந்து, சுகாதாரம் காக்க வேண்டும். குறைந்தபட்சம் கையுறை அணிந்தாவது, டிக்கெட் வழங்க வேண்டும்.
அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டல பொது மேலாளர் மகேந்திரகுமார் கூறுகையில், ''அரசு பஸ்களை பொறுத்தவரை வெளியூர் பஸ்களில், 'எலக்ட்ரானிக் டிக்கெட்' இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'டவுன் பஸ்களிலும் இந்த இயந்திரங்களை விரிவுபடுத்த, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். எச்சில் தொடாமல் டிக்கெட் வழங்க, கண்டக்டர்களுக்கு வலியுறுத்தப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-202019:44:58 IST Report Abuse
Ram Pollachi கேரளாவில் பெரும்பான்மையாக ஓடும் தனியார் வண்டிகளில் பயணச் சீட்டு வழங்கப்படுகிறதா? ஜி.டி. நாயுடு கம்பெனி பேருந்தில் பயணம் செய்த அனுபவம் உண்டா?
Rate this:
Share this comment
Cancel
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202017:13:24 IST Report Abuse
Subramanian மும்பை பேருந்துகளில் நடத்துனர் கையில் இருக்கும் பயண்சீட்டு பெட்டியில் ஒரு சின்ன துண்டு sponge ம் இருக்கும். இந்த sponge ல் தண்ணீரில் நனைந்து இருக்கும். வங்கிகளில் காசாளர் உபயொகிப்பதை போன்று. இதை மும்பையில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நடைமுறையில் உள்ளது இங்கு நடைமுறைப்படுத்த என்ன தடங்கலோ
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
20-மார்-202013:03:10 IST Report Abuse
venkatan எச்சில் தடவறது,துப்புறது,மூக்கு சிந்தரது இவை யாவும்.கோரோணா இல்லய் எல்லா வியாதிகளும் வரும்.எப்போ இந்திய சன நாயகம் திருந்தபோகிறதோ...தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X