பொது செய்தி

தமிழ்நாடு

'ஏப்ரல் 1 முதல் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்'

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
'ஏப்ரல் 1 முதல்,எந்த ரேஷன்,கடையிலும்,பொருள்,வாங்கலாம்'

சென்னை:''எந்த ரேஷன் கடைகளிலும், பொருட்களை வாங்கும் திட்டம், ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வரும்,'' என, உணவுத்துறை அமைச்சர், காமராஜ் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - ராதாகிருஷ்ணன்: நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும்?

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் ஜூன் மாதம் 1ம்தேதி தேதிக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டம், தமிழகத்தில் முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டசபையில் அறிவித்தார்.

அமைச்சர் காமராஜ்: நெல்லுக்கான ஆதார விலையாக, குவிண்டாலுக்கு, 1,905 ரூபாய் வழங்கப்படுகிறது. சன்ன ரகத்திற்கு 70 ரூபாய்; சாதா ரகத்திற்கு, 50 ரூபாயும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இது, 2011ல், 1,100 ரூபாயாக இருந்தது.நேரடி கொள்முதல் மையங்கள், 1,800லிருந்து, 2,029 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 18 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

எந்த ரேஷன் கடையிலும், பொருட்கள் வாங்கும் திட்டம், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், சோதனை அடிப்படையில், ஒரு மாதம் செயல்பாட்டில் இருந்தது. இந்த திட்டத்தில், 9,000 பேர், வேறு ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி பயனடைந்தனர்.இதில், எந்த நடைமுறை சிக்கல்களும் இல்லை. இதனால், ஏப்., 1 முதல், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பின், எந்த ரேஷன் கடைகளிலும், பொது மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

காங்கிரஸ் பாண்டி: ஸ்மார்ட் ரேஷன் கார்டு தொலைந்தால், 'இ - சேவை' மையத்தில் விண்ணப்பித்து மீண்டும் பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் காமராஜ்: தொலைந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு பதிலாக, மாற்று ரேஷன் கார்டை, நேரடியாக விண்ணப்பித்து உடனடியாக பெறலாம். இதுவரை, 8,000 கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, உடனடியாக பெற, ஏப்., 1 முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
20-மார்-202019:08:57 IST Report Abuse
Ramesh Sundram சென்னையை தவிர வேறு எங்கும் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வதில்லை நான் பக்கத்தில் இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் இருக்கிறேன் முகவரி மாற்றம் செய்து புதிய கார்டு அச்சு அடிக்க online apply செய்து 3 மாதம் ஆகி விட்டது ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகா ஆபீஸ் அலைந்தது தான் மிச்சம் எங்கும் சரியான பதில் கிடைக்கவில்லை ஒரு வேளை காந்தி பட நோட்டை காண்பித்து இருந்தால் வேலை முடிந்து இருக்குமோ என்னவோ
Rate this:
Share this comment
Cancel
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-மார்-202011:33:44 IST Report Abuse
R.PERUMALRAJA April 1 ....FOOL 's DAY என்று சொல்லுவார்களே....?
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
20-மார்-202008:21:35 IST Report Abuse
RajanRajan தவற விட்ட ஸ்மார்ட் கார்டை மற்றவர்கள் உபயோகிக்காமல் பிளாக் பண்ணிவிட்டு புதிய கார்ட் வழங்கும் வகையில் உள்ள அமைப்பு இங்கு தேவை. இது நடைமுறை படுத்த பட்டுள்ளதா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X