பொது செய்தி

தமிழ்நாடு

இந்த 'மாஸ்க்கை' நீங்கள் மீண்டும் பயன்படுத்தலாம்!

Added : மார் 20, 2020
Share
Advertisement

கோவை:கோவை கணபதி பாரதிநகர் பகுதியில், சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் ஒரு சிறுதொழில் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, புதிய வகை 'ரீயூஸ்' மாஸ்க் தயாரித்து வருகிறது.இது குறித்து தயாரிப்பாளர் இஷானா கூறியதாவது:கொரோனா வைரஸ் காரணமாக, முக மாஸ்க் தேவை என, நிறைய ஆர்டர்கள் வந்துள்ளன. அதனால் நாப்கின் தயாரிப்பதை திருத்தி விட்டு, இரவு பகலாக மாஸ்க் தயாரிக்கிறோம். இது, ரீயூஸ் மாஸ்க். தினமும் சோப்பு போட்டு, நன்றாக வாஷ் செய்து, காயவைத்து மறுபடியும் பயன்படுத்தலாம். 'யூஸ் அண்ட் த்ரோ' மாஸ்க் பயன்படுத்தினால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் தொற்று மேலும் அதிகரிக்கும். இது மிருதுவான காட்டன் துணியால் தயாரிக்கப்படுவதால், சலவை செய்து மீண்டும் பயன்படுத்தலாம். மாஸ்க் தட்டுப்பாடும் வராது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X