பொது செய்தி

தமிழ்நாடு

அன்றோ '300' இன்றோ '3': மழுங்கியது 'நிப்' தொழில்

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அன்றோ '300' இன்றோ '3': மழுங்கியது 'நிப்' தொழில்

விருதுநகர் : அரசு மானியம் இல்லாதததும், 'லெட்' மற்றும் 'பால்பாயின்ட்' பேனா வருகையாலும் 300க்கும் மேற்பட்டு செயல்பட்டு வந்த பேனா நிப் தொழிற்சாலைகள் இன்று விரல் விட்டு எண்ணும் அளவில் மூன்றாக குறைந்துள்ளது.

பேனாவில் தேய்மானம் என்பது அதன் நிப் மட்டுமே என்பதால் நிப்பை மாற்றினால் போதும் பேனாவை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனால் ஒரு காலத்தில் பேனாவை விட பேனா நிப் தேவை அதிகமாக இருந்தது. விருதுநகர் மாவட்டம் சாத்துார் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் 300க்கு மேற்பட்ட பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. 2,500க்கும் மேற்பட்டோர் இத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்திய அளவில் சாத்துாரில் மட்டுமே நிப் தொழிற்சாலைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்காலகட்டத்தில் நிப் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிப்ட் ஆக இரவு பகலாக வேலை பார்த்தனர். கடந்த 1960 ல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எவர்சில்வர் இறக்குமதி செய்யப்பட்டபோது பேனா நிப் தொழிலுக்கு மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்கப்பட்டன. அதன்பின் அந்த மானியம் நிறுத்தப்பட்டு விட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் பள்ளி,கல்லுாரி மாணவர்கள் , அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் உட்பட அனைவரும் பால்பாயின்ட் பேனாக்களை பயன்படுத்தத் துவங்கியதால் மை பேனாக்கள் ஓரம் கட்டப்பட்டன. இதன் விளைவாக நிப் தயாரிப்பு தொழிலும் முடங்கியது.300க்கு மேல் இருந்த ஆலைகளும் தற்போது மூன்றாக குறைந்துள்ளன.

சாத்துார் மகேஷ்வரி நிப் ஒர்க்ஸ் உரிமையாளர் சங்கர நாராயணன்,'' தொழில் துவங்கிய ஆரம்பகாலங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. 1990 ல் பால் பாயின்ட் மற்றும் லெட் பேனாக்களின் வருகையால் பேனாக்கள் மற்றும் நிப்புகளின் தேவை குறைய துவங்கியது. அரசு மானியமும் நிறுத்தப்பட்டதால் தற்போது தொழில் நடத்தவே சிரமமாக உள்ளது. குடிசைத் தொழிலில் வரும் இத்தொழிலுக்கு அரசின் சலுகையோ கடனுதவியோ வழங்கப்படுவதில்லை.

தற்போது 3 தொழிற்சாலைகளே நிப் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.10 தொழிலாளர்கள் தான் உள்ளனர். மீண்டும் இத் தொழில் புத்துயிர் பெற வேண்டுமானால் மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களில் பேனா பயன்படுத்துமாறு அறிவித்தால் எங்கள் தொழிலில் பலம் பெறும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மார்-202011:10:23 IST Report Abuse
ஆப்பு மறக்ஜ முடியாத அந்த நாட்கள். புது நிப் பேனாவை இன்றைய புதுக்காரை விட அழுக்கு படாமல் பத்திரமாக வைத்துக் கொள்வேன். கேம்லின் கம்பெனி பேனா மிகவும் நல்ல பேனா. கொஞ்சம் விலை அதிகம். 6 ரூபாய். வில்லியம் எனப்படும் கம்பெனி பேனாவும்.பிடிக்கும் கொஞ்சம் பட்டையாக எழுதும். ஆறாங்கிளாசில் பென்சிலிலிருந்து பேனாவுக்கு பதவி உயர்வு. ஹை ஸ்கூலாச்சே... ஆனால் வாத்தியாரின் சிவப்பு மை பேனாவைக்கண்டால் புடிக்காது. ஒரு பயம் கூட. பேனா எழுதலைன்னா நிப் மாத்துவோம். நிப் 1 ரூபாய். இங்க் புட்டி 2 ரூபாய்... அழகான நாட்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X