சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேகத்தடையில் விழுந்தவர் சாவு

Added : மார் 20, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே பைக்கில் சென்ற வாலிபர் வேகத்தடையில் நிலை தடுமாறி விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த அயன்குஞ்சரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி மகன் சங்கர், 29; இவர் கடந்த 13ம் தேதி மதியம் சின்னகுப்பத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்று திரும்பினார்.உளுந்துார்பேட்டை அரசு பணிமனை அருகே வந்தபோது வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார்.உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X