பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா'வில் இருந்து காத்திட திருக்கடையூரில் மிருத்தி உஞ்சய மகா யாகம்

Added : மார் 20, 2020
Share
Advertisement

மயிலாடுதுறை திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில்,'கொரோனா' வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காத்திட வேண்டி,'மிருத்தி உஞ்சய' மகா யாகம் நடைபெற்றது.நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சிவபெருமான் மார்கண்டேயருக்காக, எமனை சம்ஹாரம் செய்த தலமாகும். இக்கோவிலில் பக்தர்கள் யாகங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டால் எமன் பயம் நீங்கி, ஆயுள் விருத்தியடையும் என்பது ஐதீகம்.இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நேற்று அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் 'கொரோனா' வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காத்திட வேண்டி,'மிருத்தி உஞ்சய' மகா யாகம் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு நந்தி மண்டபத்தில் வெள்ளி கலசங்களில் சுவாமி, அம்பாளை ஆவாகனம் செய்து மிருத்தி உஞ்சய மகா யாகம், தன்வந்திரி யாகம் ஆகியவை 96 வகையான மூலிகை பொருட்கள் மற்றும் சித்தர்கள் அருளிய ஏழு வகையான திரவியங்களை கொண்டு நடத்தப்பட்டது.தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகாசன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற மகா யாகத்தை மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாதன் சிவாச்சாரியார் தலைமையில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தை சேர்ந்த 108 சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தது. கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X