பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பிரச்னையைப் போக்க நடவடிக்கை சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ., கோரிக்கை

Added : மார் 20, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி:இரு மாவட்டத்திற்குட்பட்ட ஆட்டு பண்ணையில் அமைக்கப்படும் கால்நடை ஆராய்ச்சி பூங்காவை 'சின்னசேலம் தலைவாசல் பூங்கா' என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., உதயசூரியன் சட்டசபையில் பேசினார்.
மேலும், அவர் பேசியதாவது:விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டம் மற் றும் சேலம் மாவட்டத்திற் குட்பட்ட 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆட்டு பண்ணை உள்ளது. கடந்த 1957ம் ஆண்டு முதல் சின்னசேலம் ஆட்டு பண்ணை என்றுதான் அழைக்கப்படுகிறது.அங்கு கால்நடை பூங்கா, ஆராய்ச்சி பண்ணை மற்றும் கால்நடை மருத்துவக் கல்லுாரியை உருவாக்குவதில் மிகுந்த மிகழ்ச்சி. சேலம் மாவட்டத்திற்குட்பட்டே கட்டப்படுகிறது. இதில், விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்) 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஏன் மருத்துவக் கல்லுாரியைக் கட்டக் கூடாது.இரு மாவட்டங்களை உள்ளடக்கியள்ளதால் 'சின்னசேலம் தலைவாசல் பூங்கா' என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.தற்போது, சின்னசேலம், சங்கராபுரம், வடக்கனந்தல் பேரூராட்சிகளில் குடிநீர் பிரச்னையை போக்க அதிகாரிகள் மூலம் வழிவகைகள் மேற்கொள்ள வேண்டும். சங்கராபுரத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உருவாக்கி தர வேண்டும்.சங்கராபுரத்தில் புதிய மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும். வெள்ளிமலை ஊராட்சி ஒன்றியம் மோட்டாம்பட்டி - கூடலுார் மற்றும் கல்படை, தொரடிப்பட்டு ஆறுகளின் குறுக்கே மேம்பாலங்கள் கட்ட வேண்டும். கல்வராயன்மலையில் கடுக்காய் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.இவ்வாறு உதயசூரியன் எம்.எல்.ஏ., பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X