கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு: கோர்ட்டில் பரிசோதனை

Added : மார் 20, 2020
Share
Advertisement

கோவை:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று முதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி சார்பில், மருத்துவர்கள், செவிலியர், மருந்தாளுனர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், தீவிர சோதனை நடத்தினர்.நீதிமன்றத்தில் ஆறு நுழைவு வாயில்கள் உள்ளன. இவற்றில் நான்கு நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. இரண்டு வாசல்கள் மட்டும் திறக்கப்பட்டு, அவ்வழியாக வருவோருக்கு, கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டு, கை கழுவிய பின் அனுமதிக்கப்பட்டனர்.தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்யப்பட்டது. 98 டிகிரிக்கு மேல் உடலில் வெப்பம் காணப்பட்டவர்களுக்கு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.நீதிமன்றத்தில் வழக்காடிகள் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க, உடனுக்குடன் வாய்தா தேதி போடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.பெரும்பாலான வழக்குகளில், விசாரணை கைதி களை நேரில் ஆஜர்படுத்தாமல், வீடியோகான்பரன்சில் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் காரணமாக, கூட்ட நெரிசலின்றி நீதிமன்ற வளாகம் காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X