சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வதந்தி பரப்பினால்... டி.ஜி.பி., எச்சரிக்கை

Added : மார் 20, 2020
Share
Advertisement

சென்னை, :''கொரோனா வைரஸ் குறித்து, தவறான தகவல்கள் பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, டி.ஜி.பி., திரிபாதி கூறினார்.கொரோனா வைரஸ் பரவுவது குறித்து, 'பேஸ்புக்; டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. கோழிகள் வாயிலாக, கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரப்பிய, கரூர் மாவட்டம் கூனம்பட்டியைச் சேர்ந்த, பெரியசாமி, 47, என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம், கொங்கம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலமும், 30, கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல வதந்தி பரப்புவோரை, போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், 'கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், தமிழகத்தில், 144 என்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என, நேற்று தகவல் பரவியது.இதுகுறித்து, டி.ஜி.பி., திரிபாதி கூறுகையில், ''கொரோனா வைரஸ் குறித்து, பொது மக்களிடம் பீதி ஏற்படும் வகையில், வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X