சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலம் தருவதாக ரூ.13 லட்சம் மோசடி: பாதிரியார் மீது வழக்கு

Added : மார் 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாகர்கோவில், நாகர்கோவிலில் நிலம் வாங்கி தருவதாக கூறி 13.50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிரியார் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நாகர்கோவில் ஒழுகினசேரியை சேர்ந்தவர் ஸ்டீபன் 52. இவருக்கு தேரூர் பகுதியில் உள்ள நிலத்தின் அருகே ராமன்துறையை சேர்ந்த பாதிரியார் ஜான்தமஸ்கு என்பவரின் நிலம் இருந்தது. இந்த நிலத்தை 25 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு பேசி பவர் ஏஜென்ட் ராஜன், அருள்ஜெயசிங் ஆகியோர் மூலம் 2019 ஜனவரியில் 13.50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.ஆனால் கிரயம் செய்து கொடுக்காமல் காலம் கடத்தி வந்தவர்கள், பின்னர் அந்த நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து ஸ்டீபன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட குற்றப் பிரிவு போலீசார், பாதிரியார் ஜான்தமஸ்கு, ராஜன், அருள்ஜெயசிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
20-மார்-202012:45:31 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ஊருல இல்லாத பித்தலாட்டம் செய்துட்டு " பாவமன்னிப்பு " செய்க என கூக்குரல் இட்டால் போதும்..அது கிடைத்திடும் . அடுத்த பித்தலாட்டத்துக்கு ரெடி ஆவலாம் .. செம்ம ஐடியா மச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X