சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைவலியால் அவதி: மூதாட்டி தற்கொலை

Added : மார் 20, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே தலைவலியால் பூச்சி மருந்து குடித்து மூதாட்டி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த கணபதிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி நவநீதம், 69; இவர் அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 17ம் தேதி மீண்டும் தலைவலி ஏற்பட்டதால், மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று நவநீதம் இறந்தார்.மற்றொரு வழக்குவிக்கிரவாண்டி அடுத்த தொரவி காலனியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 42; இவரது மகள் அருள் சக்தி, 23; இவர் அதே பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ், 27; என்பவரை காதலித்து 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லக்ஷிதா, 5; கவின், 3; என இரு குழந்தைகள் உள்ளனர்.இவரது கணவர் சத்தியராஜ் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்ததால், மனமுடைந்த அருள்சக்தி கடந்த 18ம் தேதி வீட்டில் துாக்கு போட்டு இறந்தார்.தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மருமகன் சத்தியராஜ், இவரது தம்பி ஆகாஷ், தாய் அம்மச்சி, உறவினர் மூர்த்தி ஆகியோர் மீது கொடுத்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X