தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

Added : மார் 20, 2020
Share

மயிலம்:மயிலம் பகுதி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வட்டார வள மையம் சார்பில் மயிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, மயிலம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், சம்பந்தம் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் ஸ்ரீதர் வரவேற்றார்.மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி, வட்டார கல்வி அலுவலர் சுமதி, டாக்டர் பாக்கியலட்சுமி ஆகியோர் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள், நோய் பரவும் விதம், அதனை தடுக்கும் நடவடிக்கைகள், முறையான சிகிச்சைகள் மற்றும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் குறித்து விளக்கி பேசினர். மேலும், கைகளை கழுவும் முறைகள் குறித்து 30 வினாடிகள் செயல்விளக்கம் அளித்தார்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வாசு, சுகாதார ஆய்வாளர் துரைசாமி ஆசிரியர் பயிற்றுநர் தீப்பாஞ்சான், தனசேகர், செந்தில் ராஜா, தலைமையாசிரியர் அருள்மொழிவர்மன் உட்பட அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X