பொது செய்தி

தமிழ்நாடு

வன விலங்குகளுக்கு தண்ணீர் வனத்துறையினர் ஏற்பாடு

Added : மார் 20, 2020
Share
Advertisement
 வன விலங்குகளுக்கு தண்ணீர் வனத்துறையினர் ஏற்பாடு

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை வனப்பகுதிக்குள் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து வனவிலங்குகளை காக்கும் வகையில் தண்ணீர் தொட்டிகளில் டேங்க்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை வனசரகத்திற்குட்பட்ட 5000 ஏக்கர் பரப்பளவில் புள்ளி மான்கள், மயில்கள், நரிகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்காததால் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகின்றன.இதனால், சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு மான் போன்ற வன விலங்குகள் உயிரிழக்கின்றன.தற்போது அதிகரித்து வரும் கோடை வெயிலில் இருந்து வன விலங்குகளை காப்பதற்காக வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.உளுந்துார்பேட்டை வனச்சரகர் காதர்பாஷா தலைமையில் வன ஊழியர்கள் காப்புக்காடு பகுதியில் உள்ள வன விலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் தொட்டிகளை சீரமைத்து டேங்க்கர் லாரி மூலம் தண்ணீரை நிரப்பி வருகின்றனர். மேலும் வன விலங்குகளுக்கு தேவையான உணவுகளையும் வைத்து வருகின்றனர்.இதனால் வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் வர வாய்ப்பு இருக்காது. சாலையில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பும் ஏற்படாது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X