பொது செய்தி

தமிழ்நாடு

ராமகிருஷ்ணா - ஜெய் கிருஷ்ணா புரிந்துணர்வு ஒப்பந்தம்

Added : மார் 20, 2020
Share
Advertisement

கோவை:துடியலுார் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள, ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியில், ஜெய்கிருஷ்ணா மாருதி சுசுகி நிறுவனத்தின், அதிநவீன தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்படுகிறது.ஆய்வகத்தில், இக்கல்லுாரி ஆட்டோமொபைல் மற்றும் மெக்கானிக்கல் துறை மாணவர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.இதற்கான ஒப்பந்தத்தில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி மற்றும் ஜெய் கிருஷ்ணா மாருதி சுசுகி நிறுவன இணை நிர்வாக இயக்குனர் பிரவீன் குமார் கையெழுத்திட்டனர்.கல்லுாரி முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''இந்த ஒப்பந்தத்தின் மூலம் புதிய, ரவீன ரக வாகனங்களை மாணவர்கள் பார்வையிடவும், பயிற்சி பெறவும் முடியும். இப்பயிற்சி முடித்த மாணவர்கள், மாருதி சுசுகி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெறலாம்,'' என்றார்.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் அலமேலு, பாலிடெக்னிக் கல்லுாரி ஆட்டோமொபைல் துறை தலைவர் ஆன்டனி பிரதீஷ், ஜெய் கிருஷ்ணா மாருதி சுசுகி பொது மேலாளர் அரவிந்த், முதுநிலை மேலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X