பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணி குலுக்கல் முறையில் நியமனம்

Added : மார் 20, 2020
Share
Advertisement
 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணி குலுக்கல் முறையில் நியமனம்

திண்டிவனம்:திண்டிவனத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான, அறை கண்காணிப்பாளர்கள், கல்வி அதிகாரி முன்னிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 27ம் தேதி துவங்கி, ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வின் போது, ஆசிரியர்களை, அறை கண்காணிப்பாளராக நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.தேர்வின்போது ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், தேர்வு பணிக்குச் செல்லும் ஆசிரியர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.இதேபோல், திண்டிவனம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களை, குலுக்கல் முறையில் தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமிப்பதற்கான நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணப்பிரியா முன்னிலையில் குலுக்கல் நடந்தது.இதில், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X