பொது செய்தி

இந்தியா

பஞ்சவடீயில் மஹாசாந்தி ஹோமம் பங்கேற்பதை தவிர்க்க வேண்டுகோள்

Added : மார் 20, 2020
Share
Advertisement

புதுச்சேரி:பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், சனிக்கிழமை நடைபெறும் மஹாசாந்தி ஹோமத்தில் பக்தர்கள் நேரடியாக கலந்து கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவி, பாதிப்பு ஏற்படுத்துவதை கண்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, மக்கள் (பக்தர்கள்) கூட்டமாக கூடுவதை தற்காலிகமாக தவிர்க்கலாம் என்பது, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி டிரஸ்டின் வேண்டுகோளாகும்.எனவே, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், வரும் 21ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள மஹாசாந்தி ஹோமத்தில், பக்தர்கள் நேரடியாக கலந்து கொள்வதை தற்காலிகமாக தவிர்க்கலாம் என, பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இத்தகவலை, பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், நரசிம்மன், பழனியப்பன் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X