'144' தடை உத்தரவு என வதந்தி: திக்குமுக்காடிய திருப்பூர்

Added : மார் 20, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா அச்சம் காரணமாக, திருப்பூரில், 144 தடை உத்தரவு போடப்பட உள்ளதாக பரவிய வதந்தி காரணமாக, பொதுமக்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் 'கொரோனா' வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளை அரசு நிறுத்தியுள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர், 'மால்' உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. மக்கள் எவ்விதத்தில் பாதிக்காத வகையில், இன்னும் மக்கள் கூடும் இடங்களை தற்காலிகமாக மூடவும் ஆலோசனை நடந்து வருகிறது.திருப்பூரில், 144 வதந்திஇச்சூழலில், திருப்பூரில், 144 தடை உத்தரவு போட உள்ளதாகவும், இதற்காக, மத்திய அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர் என, நேற்று காலை வதந்தி ஒன்று பொதுமக்கள் மத்தியில் பரவியது.மேலும், 'டிபார்ட்மென்ட்' ஸ்டோர், காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவை அடைக்கப்பட உள்ளதாக யாரோ பரப்பி விட்டனர். இதன் காரணமாக, பொதுமக்கள் பலரும் மார்க்கெட், மளிகை கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.வேலைக்கு சென்றுள்ள பலரும், வதந்தியை உண்மை என்று நினைத்து பலரும் திக்குமுக்காடி வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்புபவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X