டிவி நிருபருக்கு மிரட்டல் 20 பேர் மீது வழக்குப்பதிவு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிவி' நிருபருக்கு மிரட்டல் 20 பேர் மீது வழக்குப்பதிவு

Added : மார் 20, 2020
Share

உளுந்துார்பேட்டை :உளுந்துார்பேட்டையில் தொலைக்காட்சி நிருபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூரைச் சேர்ந்தவர் ஆதி சுரேஷ், 43; தனியார் தொலைக்காட்சி நிருபர். இவர், உளுந்துார்பேட்டை பேரூராட்சி உளுந்தாண்டார்கோவில் அரசு நடுநிலைப் பள்ளி சுற்றுச்சுவரில் வரையப்பட்டிருந்த அம்பேத்கர் படம் அவமதிக்கப்பட்டிருந்தது குறித்து தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டிருந்தார்.

இதனை அறிந்த உளுந்துார்பேட்டை அன்னை சத்யா தெருவைச் சேர்ந்தவர் கண்ணாயிரம் மகன் சத்யா என்கிற சத்தியகுமார் உட்பட சிலர் ஆதி சுரேஷை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து ஆதி சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் சத்யா மற்றும் பெயர் விலாசம் தெரியாத 20 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X