சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

Added : மார் 20, 2020
Share
Advertisement



கடலுார் :வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

கடலுார், மஞ்சக்குப்பம், வேணுகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42; அ.தி.மு.க., பிரமுகரான இவர், அண்ணா மார்க்கெட் எதிரில் கடந்த 7ம் தேதி, பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப் போது, திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த சண்முகம் மகன் சூர்யா, 24; என்பவர் இரும்பு ராடால் தலையில் தாக்கி பைக் மற்றும் 2,000 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்தார். இவரை, புதுநகர் போலீசார் கைது செய்து, கடலுார் மத்திய சிறையி்ல் அடைத்தனர். சூர்யா மீது, நெல்லிக்குப்பம், பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மற்றொரு வழிப்பறி: கடலுார் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார், 35; இவர், கடந்த பிப்., 14ம் தேதி அதே பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திருச்சி, பிராட்டியூரைச் சேர்ந்த வினோத் (எ) வினோத்குமார், 39; நாகூரைச் சேர்ந்த முருகன் (எ) சுனாமி முருகன் ஆகியோர் கத்தியை காட்டி வழிமறித்து 2,000 ரூபாயையும், கைக் கடிகாரத்தையும் பறித்துக் கொண்டனர். சிதம்பரம் போலீசார் வழக்குப் பதிந்து , இருவரையும் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இதில், வினோத் (எ) வினோத்குமார் மீது திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதுசூர்யா, வினோத் (எ) வினோத்குமார் ஆகியோரின் தொடர் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புச்செல்வனுக்கு, எஸ்.பி.,ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் சிறையில் உள்ள சூர்யாவிடம், புதுநகர் போலீசாரும், வினோத் (எ) வினோத்குமாரிடம் சிதம்பரம் போலீசாரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை நேற்று வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X