தமிழ்நாடு

மூடப்படாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை! தினமும் அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவு

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020
Share
Advertisement
  மூடப்படாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை! தினமும் அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவு

திருப்பூர்:கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, மூடப்படாத நிறுவனங்கள் மீது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசாணையின்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.கொரோனா வைரஸ், உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம், உலக நோய் தொற்றாக அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லை என்ற போதிலும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழிப்புணர்வு அவசியம்மாவட்டத்தில் செயல்படும், அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள், புதிய பணியாளரை நியமிக்க வேண்டாம்.
ஏற்கனவே உள்ள பணியாளரை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். தொழிலாளருக்கு, போதிய நோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மருந்துக்கடைகள், ஓட்டல்கள், அத்யாவசிய பொருள் விற்கும் இடங்கள், மளிகை, காய்கறி விற்பனை கடைகள், பேக்கரிகள், சிறிய கடைகள் நீங்கலாக, பெரிய வணிக வளாகங்கள், 31ம் தேதி வரை மூடி வைக்க வேண்டும்.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டாமல் மட்டுமே, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும். மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரிய வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள், 31ம் தேதி வரை, தற்காலிகமாக விடுமுறை அளித்து, முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
எச்சரிக்கை
கலெக்டர் விஜய கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர், நகராட்சி மண்டல இயக்குனர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:அத்தியாவசிய பொருள் விற்கும் கடைகள், பேக்கரி நீங்கலாக, பெரிய வணிக நிறுவனங்கள், நகைக்கடைகள், துணிக்கடைகள், 31ம் தேதி வரை மூடப்பட வேண்டும். மூடப்படாத நிறுவனங்கள் மீது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசாணை எண்:95, 96ன் படி, நடவடிக்கை எடுக்கப்படும்.அதிகாரிகள் ஆய்வு செய்து, தினமும் அந்த அறிக்கையை, மாலை, 5:00 மணிக்குள், 'இ-மெயில்' மூலமாக, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X