சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைனான்ஸ் நடத்தி ரூ.22 லட்சம் மோசடி கள்ளக்குறிச்சி அருகே இருவர் கைது

Added : மார் 20, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி அருகே பைனான்ஸ் நடத்தி பொதுமக்களிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த உத்தமநாதபுரம் அன்னக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி மகன் வேதகிரி, 36; தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வாசல் மணி மகன் சுரேஷ், 36; இருவரும், கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் புறவழிச்சாலை அருகே கூட்ரோடு பகுதியில் எஸ்.எஸ்.பி., மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தனர்.

தங்களிடம் சீட்டு கட்டினால், குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் எனக்கூறி பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்தனர். இதனை நம்பி கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பணம் செலுத்தினர்.

பணம் கட்டியவர்களுக்கு முதிர்வு தேதி முடிந்தும் பணம் திருப்பித் தரவில்லை. மேலும், எதிர்பார்த்தபடி கடனும் தரவில்லை. இந்நிலையில் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் தலைமறைவாயினர்.

இதனால், பணம் கட்டி ஏமாந்தவர்கள் டிசம்பர் 24ம் தேதி கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.

டி.எஸ்.பி., ராமநாதன் வழிகாட்டுதல்படி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் 22 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

அதன் பேரில், வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வந்த நிலையில், நேற்று இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய், ரெனால்ட் கிவிட் கார் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தியதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்தது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X