பொது செய்தி

இந்தியா

செய்திகள் சில வரிகளில்

Added : மார் 20, 2020
Share
Advertisement



இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் எல்லையோரம் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர், நேற்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். சிறியவகை பீரங்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்திய பாதுகாப்புப் படையினர், தக்க பதிலடி தந்தனர்.

__

14 பேர் விடுதலை

தானே: மஹாராஷ்டிர மாநிலம் தானேவில், கடந்த, 2012ல், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட, 14 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர். போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவர்களை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பஹல்கர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

__

மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

பல்ராம்பூர்: உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூரில், ஹரூன், 32, என்பவரை, நேற்று முன்தினம் இரவு, சில மர்ம நபர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, மூன்று பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள அவர்களை தேடும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

__

மகள்களை கொன்ற தந்தை

மெயின்பூரி: உத்தர பிரதேசத்தின் மெயின்பூரி பகுதியில், சுக்தியோ சர்மா என்பவர், தன், இரண்டு மகள்களையும், நேற்று முன்தினம் சுட்டுக் கொன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மொபைல் போனை' திருடிய காரணத்தால், அவர்களை அவர் சுட்டுக்கொன்றது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

__

நக்சலைட் சுட்டுக்கொலை

ராய்பூர்: சத்தீஸ்கரின் தண்டேவடா மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே, நேற்று துப்பாக்கிச்சண்டை நடந்தது. கம்பூர் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் நடந்த இந்த சண்டையில், ஒரு நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடம் இருந்த, வெடிப்பொருட்களும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

__

75 ஆயிரம் பணியிடங்கள்

புதுடில்லி: ராஜ்யசபாவில், மத்திய தொலைதொடர்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே கூறுகையில்,“தொலைதொடர்புத் துறையில், 2018-19 நிதியாண்டில் இருந்து, இதுவரை, 76 ஆயிரத்து, 359 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X